தும்பவனத்தம்மன் கோயிலில் மார்கழி மாத பௌர்ணமிய ஒட்டி ஊஞ்சல் சேவையில் அம்பாள் அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன் 

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த தும்பவனத்தம்மன் ஆலயம் பல்வேறு  பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. தும்பவனத்தம்மனுக்கு பௌர்ணமியை ஒட்டி சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. பின்பு  தும்பவனத்தம்மனுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், தயிர், பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  தும்பவனத்தம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



 

கோவில் வளாகத்தில் மார்கழி மாத பௌர்ணமியை ஒட்டி  அம்பாள் வாகனத்தில் தும்பவனத்தம்மன் ஊஞ்சலில் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்தம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

 




ஆருத்ரா தரிசனம்:


சிவாலயங்களில் மார்கழி மாதம் திருவாதிரை  நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் கொண்டாடப்படும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானின் தாண்டவ கோலத்தை தரிசிப்பதே ஆருத்ரா தரிசனம் ஆகும். 2023 ஆம் ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் நாளை அனுசரிக்கப்படுகிறது. வழக்கமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.




இதற்காக டிசம்பர் 18 ஆம் தேதி சிதம்பரம் நடாராஜர் கோயிலில் கொடி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலரும் தேர் முன் மா-கோலம் போட்டு பக்தியை வெளிப்படுத்தினர்.


திருவாதிரை களி செய்யும் முறை:


ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவிய பின் அதனை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வருக்க வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு ¼ கப் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு பொன்னிறமாகமாக வறுத்த பின் இரண்டையும் நன்கு ஆறவைக்க வேண்டும். பின் இதனை மிக்ஸியில் மையாக அரைத்து விடாமல் சற்று கொரகொரவென அரைக்க வேண்டும்.




அதேபோல் 1 ½  கப் வெல்லம் எடுத்து  3 கப் தண்ணீரை (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் )சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டியது, மீண்டும் அதனை அடிகனமான பாத்திரத்தில் வைத்து, அதில் அரைத்து வைத்த அரிசி கலவையை சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். களி பதம் வந்தபின் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, நெய்யில் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து கிளறினால் சூடான சுவையான திருவாதிரை களி ரெடி.