மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தில் உள்ள கரை மேட்டு தெருவில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆகிய  தெய்வங்களின் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா நடத்த ஊர் மக்கள் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து  ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகளை தொடங்கினர். 




அதனைத் தொடர்ந்து கோயில் கட்டிடங்கள் புனரமைப்பு, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் யாகசாலை பூஜை துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. 


11th 12th Public Exam: 11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு: அரசு திடீர் முடிவு- என்ன காரணம்?




பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோயில் விமான கலசத்தை அடைந்து. தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.




Railway Bridge Collapses :மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து... 17 பேர் உயிரிழப்பு


மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது  இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.