திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் –கோவில் பட்டர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில்  பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.

 
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம்
 
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இது ஆகம விதிப்படி பாரம்பரியமாக ஸ்தானிக பட்டர்கள் கருத்து தெரிவித்ததின்படி ஏற்றப்பட்டதாக அரக்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியதாக கோயில் நிர்வாகம் நிர்வாகம் கடிதம் ஒன்று வெளியிட்டது. இந்த நிலையில் இந்த கருத்து நாங்கள் கூறவில்லை என அது தொடர்பாக கடிதம் எதுவும் வழங்கப்படவில்லை எங்களது பெயரை பயன்படுத்தியது மன வேதனை அளிக்கிறதாக தெரிவித்து ஸ்தானிக பட்டர்கள் விளக்கம் கடிதம் அனுப்பினர். இந்த நிலையில் கோயில் நிர்வாகம் அனுப்பிய தீர்மான கடிதத்தில் ஸ்தானிக பட்டர்கள் கையொப்பம் பெறுவதற்காக அறங்காவலர் குழு கோவில் நிர்வாகிகள் நேற்று முதலே அவரது வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்த தகவல் அறிந்து வந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பட்டர் வீட்டு முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி, அகில பாரத அனுமன் சேனா திருப்பரங்குன்றம் தலைவர் ராமலிங்கம், பாஜக நிர்வாகிகள் வெற்றிவேல் முருகன், சரவணக்குமார், ராஜேஷ் மற்றும் அருண் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு. செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை ஆவணத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.