விருச்சிகராசி:
கடந்த வருடங்கள் முழுவதுமாக பல பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் வரப்போகும் வருடங்களில் நிச்சயமாக வெற்றி வாகை சூடப் போகிறீர்கள். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிற விருச்சிக ராசி அன்பர்களே. உங்களுக்கான திருமண யோகம் ஆரம்பித்துவிட்டது. உங்களுடைய ராசிக்கு இரண்டுக்கும் ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதி தான் குரு பகவான். விருச்சக ராசி அன்பர்களுக்கு குடும்பம் அமைய வேண்டும் என்றால் அதற்கு நிச்சயமாக குருவின் துணை இருந்து ஆக வேண்டும். தனுசு ராசி தான் உங்களின் குடும்ப பாவமாக வருகிறது. புத்திரர் ஸ்தானம் மீன ராசியில் பதிவாகிறது தனுசு மீனம் இரண்டு ராசிக்குமே குரு பகவான் தான் அதிபதி. உங்களுக்கு திருமணத்தை செய்து முழு அதிகாரத்தை பெறுகிறார் குறிப்பாக உங்களின் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பதை குடும்ப ஸ்தானமாக இருந்து அவர் ஏற்படுத்தும் முயற்சிகள் அபாரமாக இருக்கும். புத்திரர் வழியில் முன்னேற்றம், புத்திரர்களின் வளர்ச்சி போன்றவைகளை மீன ராசியின் மூலமாக அறியலாம். வெற்றி படிக்கட்டில் நீங்கள் கால் வைக்க வேண்டுமானால், பல தியாகங்களை செய்தாக வேண்டும் என்ற நிலைமை தான் விருச்சிக ராசி நண்பர்களுக்கு எப்பொழுதும் உண்டு. கால புருஷனுக்கு அஷ்டமா ஸ்தானமாக விருச்சிக ராசி வருவதால் பல ரகசியங்களை உங்களுக்குள் அடக்கியவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த ரகசியங்களை நீங்கள் பிறந்தது முதல் திருமணம் ஆகும் வரை உங்களுக்குள்ளேயே பூட்டி கிடக்கும். திருமண பந்தம் மட்டும்தான் உங்களுடைய ரகசியங்களை மற்றவர்களிடத்தில் பகிர்வதற்கு ஒரு வழி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அப்படி உங்களின் மொத்த பாரத்தையும் இறக்கி வைப்பவர் எப்பொழுது வருவார் என்று காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு. வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி முதல் திருமண யோகம் ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருந்தவர்கள் நிச்சயம் பண்ணி திருமணம் தள்ளிப் போனவர்கள் போன்ற எண்ணத்தை விருச்சிக ராசிகள் இருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வருகின்ற காலம் ஒரு போர்க்காலமே. திடீரென்று மணமகனோ மணமகளோ அமைந்து திருமண மேடையை இருவரும் ஒன்றாக அலங்கரிக்க போகிறீர்கள். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வணங்கி வர சங்கடங்கள் நீங்கும்.
மீன ராசி :
மீன ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் பார்வையாக உங்களின் ஏழாம் பாவத்தை பார்வையிடுவதால் உங்களுக்கும் திருமணம் யோகம் வந்துவிட்டது என்று கூறலாம். ஏழாம் அதிபதி புதன் உங்களுக்கு எப்பொழுதுமே நெருக்கமாகவே மற்ற ராசிகளில் பயணித்துக் கொண்டிருப்பார். நீங்கள் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதற்கு உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார் என்று பார்க்கலாம். மீன ராசிக்கு அமையக்கூடிய மனைவி இளமையான தோற்றம் கொண்டவராக இருப்பார். படிக்காதவராக இருந்தாலும் கூட பொது அறிவில் ஒரு கருத்துக்களை எப்படி பொன்மொழிய வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை உடன் காணப்படுவார். எதிலும் கணக்கு போட்டு வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பார். இப்படிப்பட்ட உங்களுக்கு மே மாதம் ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் தடைபட்ட திருமணம் கை கூடும். ஏழாம் பாவத்தில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார்கள் என்று கலங்கி நின்ற உங்களுக்கு குருவின் பார்வைக்கு ஏதும் இது படுவதால் நிச்சயமாக வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுக்கான மணமகன் அல்லது மணமகள் உங்களைத் தேடி வருவார். நீங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் தினரும் சமயத்தில் உங்களில் வாழ்க்கைத் துணை நல்லதொரு முடிவை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். அது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமையலாம். இது நாள் வரைக்கும் திருமணமே வேண்டாம் என்று இருந்த உங்களுக்கு லக்னத்தில் இருக்கும் ரகு திருமண யோகத்தை கொண்டு கொண்டு வரப் போகிறார். ராகு உங்கள் ராசியிலேயே அமர்ந்து குருவினுடைய வேலைகள் அனைத்தையும் செய்யப் போகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்ப்பதால் லக்னத்தில் இருக்கும் ராகுவும் அதேபோல செயல்பட்டு திருமணத்தை எளிதில் முடித்து வைப்பார். திருமணம் முடிந்த கையோடு அயல்நாடு அயல் தேசம் என்று சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் திருமண யோகம் உங்களுக்கு சற்று குறைவாகவே காணப்பட்டாலும் எஞ்சிய 9 மாதங்களில் நிச்சயமாக உங்களுக்கு திருமண யோகம் உண்டு. ஒருவேளை வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் திருமணம் நிச்சயமாக நின்று போனாலும் கவலை வேண்டாம். மீண்டும் உங்களுக்கு யோகம் ஏற்பட்டு மணமேடை வரை சென்று திருமணமாகும் வாய்ப்பு அதிகப்படியாக உள்ளது. லக்னத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு அருமையான பரிகாரங்கள் உண்டு. அனைத்து கோவில்களிலும் இருக்கும் சர்பகங்களை நீங்கள் சாந்தி செய்யலாம். மீன ராசியில் இருக்கும் ராகுவும் ஏழாம் இடத்தில் இருக்கும் கேதுவை நீங்கள் பரிகார மூலமாக சாந்தி செய்ய சிவன் கோவிலில் இருக்கும் ராகு கேதுவிற்கு இளநீர் தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வர உங்களின் நாக தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.