கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மற்றும் திருவீதி விழா நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.


 




 


இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் வள்ளி, தெய்வானை மற்றும் சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக திருமண கோலத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு யாக வேள்வி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


 




 


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற திருக்கல்யாண இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து அரகர, அரகரா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். அதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து பெண்களுக்கும் மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.