தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற மாதம் 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை  வழிபட்டனர்.


10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?




ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் திருவிழா:


தேனி மாவட்டம்  வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா கடந்த 17ம் தேதி நடைபெற்றது.


Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்




அதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கோலகலமாக துவங்கியது. மே 14ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்கும் இரவு பகலாக  இத்திருவிழாவில், பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் நீராடி மேள தாளங்களுடன் அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை சமர்ப்பித்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.


Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா




தேரோட்டம்


விழாவின் நான்காம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான கௌமாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம் சிறப்பாக தொடங்கியது. முன்னதாக உற்சவர் கௌமாரியம்மன் வண்ண பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேரை சிறது தூரம் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.