முருகன் திருக்கோவில்:


தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.



கோவிலின் விசேச நாட்கள்:


கோவிலில் சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகைவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற  நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.




வரலாறு:


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக்  கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான் என்று வரலாறு  கூறுகிறது.


Lok Sabha Election 2024: திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் இபிஎஸ்




இவ்வாறு பல்வேறு புகழ்வாய்ந்த பெரியகுளம் தென்கரை வராகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக் கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15.03.2024 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.


திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு சோமாஸ்கந்தர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். திருத்தேர் தேரடி திடலை விட்டு கிளம்பி கச்சேரி ரோடு, கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகர் வலம் வந்து நிலையை அடைந்தது.


Lok Sabha Elections 2024: “மோடி ஒன்றும் செய்யவில்லை; அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்” - சுப்ரமணியசாமி பரபரப்பு பேட்டி!




திருத்தேருக்கு முன்பாக  சிவனடியார்கள் வலம்புரி சங்குளை ஊதி மேலங்கள் முழங்க  பக்தர்கள் தேரை வலம்புடுத்தி இழுத்துச் சென்றனர். பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷ முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் படித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.