மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி. அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டு வந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர்.


கோயில் வரலாறு:


இந்த ஜமீனில் இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக  தினமும் அனுப்பி வைக்கப்படும். அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.



மூங்கில் அணை:


உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து  ஜமீன்தாரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஜமீன்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.


அசரீரியில்தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறல் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை  வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,



கெட்டுப்போகாத நெய்:


அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும்  இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இதுவரை யாரும் சென்றதில்லை எனவும், கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசித்திபெற்று விளங்குகிறது.