கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்று வந்தது.


 




 


இந்நிலையில் முக்கிய நிகழ்வாக சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு  ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க நடராஜர் அம்பிகை பல்லாக்கு வாகனத்திலும் கல்யாண பசுபதீஸ்வரர் சௌந்தரநாயகி வெள்ளி ரிஷிவ வாகனத்திலும் அலங்காரவல்லி வெள்ளி ரிஷப வாகனத்திலும் விழா வந்து அதை தொடர்ந்து அமராவதி ஆற்றின் சூலாயத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீர்த்தவாரி சிறப்பாக நிறைவு பெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 




 


நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 


இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, செளந்தரநாயகியம்மன் தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 




 


ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது. இதனை ஏராளமான பக்தத்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.