திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி, இந்து ஆதார் அத்தியா அறக்கட்டளை மற்றும் பாண்டுரங்கநாதர் கமிட்டி சார்பில் சுமார் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பீட்டின் கொடை அனுப்புங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். 



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், "புரட்டாசியில் திருப்பதி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவ நிகழ்ச்சி தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருப்பதியில் நேரடியாக செல்ல முடியாதவர்கள் இங்கு நடந்த கொடை அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமை என்றாலே ஆன்மீக விழா தமிழகத்தில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது என்றார்.


திருப்பதியின் லட்டு கலப்படம் செய்த விவகாரத்தில் கலப்படம் செய்தவர்கள் கொடிய பாதகம் அனுபவிப்பார்கள். கலப்படம் செய்தவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். அவர்கள் லாப நோக்கத்துடன் செய்தார்களா அல்லது தங்களது மனதை புண்படுத்துவதற்காக செய்தார்களா இருக்க தெரியவில்லை. அதை யார் செய்திருந்தாலும் தவறு. திருத்திக் கொள்ள வேண்டிய தவறு. தண்டனை நிச்சயம் கிடைக்கும். கலப்படம் செய்யப்பட்ட லட்டு என தெரிந்தவுடன் அனைத்து லட்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தடை செய்துள்ளனர். புதிதாக செய்யப்படும் லட்டுகளில் தவறுகள் நடக்காது என தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.  



இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராமஜென்ம பூமி பிராண பதிஷ்டை செய்யும் விழாவில் கூட ஒரு லட்சம் லட்டு விநியோகிக்கப்பட்டது. அப்போதும் கூட கலப்பட செய்தி வந்துள்ளது. இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. தற்போது வேண்டும் என்று சில தீய சக்திகள் பிரசாதத்தில் புனித தன்மையின் மீது சர்ச்சையை எழுப்புகின்றனர். பழனியில் பஞ்சாமிரகம் வழங்கப்படுவதும் இப்படித்தான் இவருக்கு தெரிவிக்கின்றனர். பழனி என்பது நோய் தீர்க்கும் இடம். நவபாசனத்தில் முருகர் அங்கு உள்ளார். அங்கே அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம் உடனடியாக மருந்தாக மாறுகிறது. மேலும் திருப்பதி மற்றும் பழனியில் பிரசாதத்தில் கலப்படம் இருப்பதாக வந்த செய்தி இந்து மக்களிடையே பெரிய பாதிப்பு இருக்காது. கோவில்களில் பெறப்படும் பிரசாதம் விஷமாக இருந்தாலும் அதனை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள் லட்டு பிரசாதத்தில் கலப்படம் என்ற விவகாரம் மூலம் லட்டின் பெருமை மகிமை என்றும் குறையாது என்றார். மேலும் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடமும் கோவில் நிர்வாகத்திடமும் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.


ஜெகன் மோகன் ரெட்டி இல்லத்தில் கலப்படம் செய்யவில்லை என அவரது தரப்பில் உள்ளதை கூறுகிறார். விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ள அரசாங்கம் கலப்படம் நடைபெற்றுள்ளதாக கூறுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகிறார். எனவே தவறு நடந்திருந்தால் நிச்சயம் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.