பிரான்சில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அந்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் அதிபருடன் விருந்திலும் பங்கேற்றார்.

Continues below advertisement

கடும் குளிரிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

நேற்று(10.02.25) டெல்லியிலிருந்து புறப்பட்டு பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, ராணுவ அணிவகுப்புடன் அந்நாட்டு ஆயுதப்படை அமைச்சர் செபாஸ்டியன் வரவேற்றார்.

Continues below advertisement

அதைத் தொடர்ந்து பாரிஸில் தான் தங்கும் ஹோட்டலுக்கு சென்றடைந்த மோடியை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்திய பாரம்பரிய இசையுடன் இந்திய புலம்பெயர்ந்தோர் உற்சாகமாக வரவேற்றனர்.

இது குறித்த புகைப்படங்களுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, பாரீஸ் சென்றடைந்ததாகவும், எதிர்கால துறைகளான ஏஐ, தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பயணத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியர்களின் வரவேற்பு குறித்து பதிவிட்டுள்ள அவர், என்றும் நினைவில் நிற்கும் வகையில் அவர்கள் வரவேற்றதாகவும், கடும் குளிரால் கூட அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதை தடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அங்குள்ள இந்தியர்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது மேக்ரானுடன் பேசிய அவர், பின்னர் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸையும் சந்தித்து பேசினார். இது குறித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாரீஸில் நண்பர் இமானுவேல் மேக்ரானை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.