மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
Thaipusam 2024: பழனியில் காவடிகளை எடுத்து கிரிவல பாதையில் ஆடி, பாடி பக்தர்கள் வழிபாடு
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் கிழக்கு கோபுரம் அருகே பழனி ஆண்டவர் சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பழனி ஆண்டவருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இவ்வாண்டு தைப்பூசத் திருநாளான இன்று திரளான பக்தர்கள் மேலரத வீதியில் உள்ள ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் இருந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு சுவாமிகளின் வேடம் தரித்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் பால் காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து வீதி உலாவாக வந்து பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Thaipusam 2024: பழமுதிர்சோலையில் தைப்பூசத் திருவிழா ; தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம்