விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிளியனூர் kiliyanur கிராமத்தில் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற கடைசி அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். அகத்தியர் வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படும் இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கும் சிவன் மேற்கு நோக்கியும், அம்மாள் அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சோழர்களால் கட்டப்பட்ட இத்தலமே தேவாரப் பாடல்பெற்ற கடைசி சிவனாலயம் என்பது தனிச்சிறப்பு கொண்டது.
கருவறைச் சுவரில் உள்ள கல்வெட்டில் சோழ மன்னனின் பெயர்
இக்கோயிலில் மகா சிவராத்திரி, மார்கழி, சங்கட சதுர்த்தி உள்ளிட்ட சிவபெருமாளுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யபடுகிறது. மேலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் இக்கோவிலில் தென்புறக் கருவறைச் சுவரில் உள்ள கல்வெட்டில் சோழ மன்னனின் பெயர் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மதுரை பரகேசரி வர்மன் முதல் பராந்தகன் காலத்தில் இக்கோவில் கருங்கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியமின்மை
திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை உள்ளவர்கள் இக்கோவிலில் திங்கட்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வேண்டியது கிடைக்கும். மேலும், தொடர் வயிற்று வழியால் அவதியுற்று வருவோர் சன்னதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்ய வயிற்று வலி பூரண குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, பட்டாடை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
கிளியனூர் கிராமம் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய செல்வங்களைக் கொண்டு, விவசாயத்தில் செழித்து விலங்கியதற்கான கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய “கிள்ளியநல்லூர்” என்ற பெயரே பிற்காலத்தில் “கிளியனூர்” என்றாகியது. கிள்ளி என்றால் சோழர்களைக் குறிக்கும் சொல்லாகும். திருஞானசம்பந்தர் காலத்தில் மண் கோவிலாக இருந்த இத்தலம் பின் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னரால் கற்கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.