கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு சுவாமி மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்ம வாகனத்திலும் திருவீதி விழா காட்சியளித்தனர்.




வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் ஆலயத்தில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் சுவாமியின் திருவீதி உலா நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக சென்ற பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.



ஆலயம் வந்த மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு திருவீதி உலா நிறைவு பெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வெள்ளி சிம்ம வாகன திருவீதி உலா காட்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சி.



கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான துர்க்கை அம்மன், பைரவர், விஸ்வகர்மா, காயத்ரி தேவி, தீர்த்த விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் பிரத்யேக மேடை அமைக்கப்பட்டு மேடையில் பல்வேறு கலசங்கள் வைக்கப்பட்டது.


தொடர்ச்சியாக மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் சிவாச்சாரியார் மற்றும் தலைமை சிவாச்சாரர்கள் ஒன்று கூடி வேத மந்திரங்கள் கூறியபடி பிரத்தியேக யாக வேள்வி நடை நடத்தினர். 



தொடர்ந்து யாக வேள்விக்கு தேவையான பல்வேறு மூலிகை பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்று தொடர்ச்சியாக யாக வேள்விக்கு பூரணாகதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் பாலாலய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து அனைவருக்கும் தீர்த்தம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial