ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; 17 நாட்களில் 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று முன்தினம் வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

Continues below advertisement


மேலும் ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் திருக்கோவில் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது தவிர நான்கு கோபுரங்களில் முன்பும் நடமாடும் மருத்துவக் குழு அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மூன்று ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்துள்ளோம். தீத்தடுப்புக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். ஏற்கனவே ஒரு மணி நேரத்துக்கு இந்த கோவிலில் 1,800 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது 12 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இன்னும் உள்ள சில நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்ககூடும் என 3000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola