கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா, காயத்ரி தேவி, சித்தி விநாயகர் சுவாமிகள் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.


 




விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு  கரூரில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி தேவி, சித்தி விநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்து வந்தனர். மாலையில் அமராவதி நதிக்கரையின் ஸ்ரீவிஸ்வ பிராமண சபையோகார் சார்பில்  விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு திருவீதி உலா நடைபெற்றது. தொழில் கடவுளான ஸ்ரீ விராட் விஸ்வகர்மா, காயத்ரி தேவி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆகிய உற்சவ  சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்ம தீர்த்தம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜவகர் பஜார், லைட் ஹோஸ் கார்னர், அகிய முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கையுடன் எடுத்துச்சென்ற  சுவாமியை வழிநெடுங்கிளும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டப படி மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது. 


கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 




 


கரூரில் விஸ்வகர்மா மக்கள் மையம் நல சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்லாண்டிபட்டியில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் ஸ்ரீ விஸ்வகர்மா உருவப்படத்துக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பின்னர் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரசாத பைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கோபால் மாவட்ட செயலாளர் , செல்வராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.


 




 


மேலும் மத்திய மண்டல அமைப்பாளர் சண்முகம், மாநில செயற்குழு தலைவர் மகேஷ், கரூர் மாவட்ட செய்தி தொடர்புள்ள முத்துசாமி, கரூர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன், கரூர் மாவட்டம் அமைப்பாளர் செல்வகணேஷ் மற்றும் விஸ்வகர்மா மக்கள் மைய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.