குளித்தலை அருகே தாளியாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலய கும்பாபிஷே விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆலய சிவாச்சாரியார்கள் யானை, குதிரை மூலம் தீர்த்தம் கொண்டு வந்தனர்.




கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை ஒட்டி திம்மாச்சிபுரம் காவிரி நதிக்கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வண்ண உடைகள் அணிந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.




நிகழ்ச்சியை முடித்து பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடிய பிறகு தாங்கள் கொண்டு வந்த குடத்தில் புனித தீர்த்தம் முத்தரிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் சிவாச்சாரியார் யானை மீது அமர்ந்தவாறு தீர்க்க குடத்தை ஆலயம் கொண்டு வந்தனர்.




அதைத் தொடர்ந்து குதிரைகள் ஆட்டம் ஆடியபடி, பக்தர்கள் ஆவேசத்துடன் பக்தி பரவசத்துடன் தங்களது தீர்த்த குடத்தை ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.




குளித்தலை, தாளியாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலய கும்பாபிஷே விழாவில் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்துள்ளனர்.