யுகாதி பண்டிகை முன்னிட்டு மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் யுகாதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி திருவீதி விழா காட்சி அளித்தார். ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமி திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.
யுகாதி பண்டிகை முன்னிட்டு சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தேங்காய் பழம், வைத்து வழிபட்டு செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
டி.செல்லாண்டிபாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை பூஜை.
கரூர் மாநகராட்சி, டி.செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அம்மாவாசை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை டி. செல்லாண்டிபாளையம் பகவதி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.