குளித்தலை அருகே 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் குடமுழுக்கு விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில்  ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

குளித்தலை அருகே வேலாயுதம்பாளையத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில்  ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

 


முன்னதாக கடந்த மார்ச் 2 ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தனம், லட்ச்சார்ஜனை, மகா தீபாராதனை உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.

காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மங்கல இசை முழங்க  ஊர்வலமாக கொண்டு வந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் வேலாயுதம்பாளைம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மட்டும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி யானை பாகன் வாகனத்தில் காட்சி அளித்தார்.

 


 

 

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் கல்யாண வெங்கட்ராம ஸ்வாமி உற்சவர் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை-பாகன் வாகனத்தில் திருவீதி விழா காட்சியளித்தார்.

ஆலய மண்டபத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமணர் சுவாமி ஆலய முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.

 


 

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் உற்சவர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola