விநாயகர் சதுர்த்திக்கு 23 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு வடிவங்களில் களிமண்ணால் ஆன விநாயகர் பணிகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்
மானமதுரை மண்பாண்ட தொழில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. சீசனுக்கு ஏற்ற மண்பாண்ட பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில், அப்பகுதியில் கிடைக்கும் மண்ணால் மட்டுமே செய்யப்படும் பொருட்கள் என்பதால் பலரும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். மானாமதுரையில் மண்பாண்ட பொருள் தயாரிப்பில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனா. இவர்களுக்கு என மண்பாண்ட கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் விநாயகர் 14 தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
மூன்று முதல் ஆறு அடி உயர சிலைகள் மட்டும் கைகளினால் தயாரிக்கப்படுகின்றன.
இதற்காக மானாமதுரையில் அரை அடி முதல் ஆறு அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரித்து வருகின்றனர். முற்றிலும் மண்ணால் தயாரிக்கப்பட் இந்த சிலைகளை மாநிலம் முழுவதிலும் இருந்தும் பலரும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அரை அடி, ஒரு அடி சிலைகள் அனைத்தும் அச்சில் வார்க்கப்பட்டு வர்ணம் தீட்டி தயாரிக்கப்படுகின்றன. மூன்று முதல் ஆறு அடி உயர சிலைகள் மட்டும் கைகளினால் தயாரிக்கப்படுகின்றன.
நீர் நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கு எந்த தீங்கும் பாதிப்பும் ஏற்படாது
தற்போது 23 தினங்கஇருக்கும் நிலையில் தற்போது பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட குறிப்பாக இந்தாண்டு குதிரை வாகன விநாயகர் சிம்ம வாகன விநாயகர் நந்தி வாகன விநாயகர் முஞ்சூறு( எலி) வாகன விநாயகர் நாகத்தால் ஆன விநாயகர் போட பல்வேறு விநாயகர்கள் பணிகளை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர் ஒரு பத்து தினங்களில் வர்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பமாகின்றன குறிப்பாக நாங்கள் செய்யும் விநாயகர்கள் நீர் நிலைகளில் கரைக்க கூடியவை நீர் நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கு எந்த தீங்கும் பாதிப்பும் ஏற்படாது.
