சிறுகாவேரிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி புதுக்கோயில்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிபாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி புதுக் கோயில் புனராவர்த்தன திருநெறிய தீந்தமிழ் கடவுள் மங்கல பெருவிழா மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று மாலை புண்ணியாவாசனம், பெருமானின் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, யாகசாலை அலங்காரம் யாகசாலை பூஜைகள், விசேஷ ஓமங்கள் தீபாராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று கோபூஜை, சுவாமி சித்ர உருவம் திறப்பு, திவ்ய பிரபந்தம், விசேஷ ஹோமம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு புனிதநீர் கோவிலில் உள்ள நான்கு பிரகாரங்களை சுற்றி வந்து பம்பை உடுக்கை முழங்க மேல தாலங்களுடன் புனிதநீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
விழாவை காண வந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஆலய குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான விழாவில் கலந்துகொண்டு சாமியாருளை பெற்றனர்.கும்பாபிஷேக விழாவை பார்ப்பது கோடி புண்ணியம் என கருதப்படுகிறது. கும்பாபிஷேக விழாவை பார்ப்பது கோவிலை கட்டுவதற்கு சமம் என பக்தர்களால் நம்பப்படுகிறது. கோவிலில் ஊற்றப்படும் புனித நீர் நம் மீது படும் பொழுது கடவுளின் அருள் நேரடியாக கிடைப்பதாக நம்பப்படுகிறது