தைப்பூசத்தன்று பழனி முருகன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட எழுமிச்சை பழம் அதிக  விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. 


தைப்பூசம் : 


தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நன்னாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டிற்கான தைப்பூச விழா கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 5ம் தேதியே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு முருகன் ஆலயங்கள் களைகட்டத் தொடங்கின. இந்த நிலையில்,  தைப்பூச தினத்தன்று.காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வெகு விமர்சையாக விழாவானது நடந்து முடிந்தது. 


எலுமிச்சை ஏலம்: 


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டு தோறும் தைப்பூசத்திற்கு முன் தினநாளிலிருந்து  பழனியில் தங்கி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் மக்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குவர். இந்த அன்னதானத்தை வழங்குவதற்கு முன்பாக எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர், அதே போல ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவர், அந்த வகையில் இந்த ஆண்டும் ஒவ்வொரு பூஜையில் வைத்து முருகன் பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்களானது ஏலம் விடப்பட்டது.


இதில் ஒவ்வோரு நாளும் பூஜையில் எலுமிச்சை பழம் ஏலத்தில் விடப்பட்டது, இந்த பழங்கள் 16000-40000 வரை ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில் இறுதியாக தைப்பூசத்தன்று முருகர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழமானது ரூ 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டது