'சிம்மத்தில் வரப்போகும் புதன்' அடிக்கப் போகும் அதிர்ஷ்ட லாட்டரி!!!

Continues below advertisement

 அன்பார்ந்த வாசகர்களே வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் பொதுவாகவே புதன் பணத்தைக் குறிப்பவர் நோட்டுகளை புத்தகத்தை பேப்பரை எழுத்துக்களை கணக்கு போடுதலை வங்கியில் இருக்கும் பணத்தை இப்படியாக பொருளாதாரத்தை சுற்றியே புதன் இயங்கிக் கொண்டிருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதனால் தான் பணத்தை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமியே பெருமாளின் மார்பிலே சாய்ந்த படி இருக்கிறார்....

 புதனின் அதி தேவதை மகாவிஷ்ணு சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி எப்பொழுதுமே சுக்கிரன் புதன் மூன்று ராசிக்குள் இணைந்து இருப்பார்கள் பெரும்பாலான ஜாதகங்களில்... சிம்ம புதன் உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார்...

Continues below advertisement

 மேஷ ராசியை பொருத்தவரை மூன்று மற்றும் ஆறுக்கு அதிபதியான புதன் ஐந்தாம் பாவத்தில் அமர்வது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும் காரணம் ஆரம்பத்தில் இருக்கும் கேது உங்களை சுற்றி என்ன மாதிரியான பொருளாதார ரசிகர்கள் நடக்கிறது என்பதை ஆணித்தரமாக புரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதன் சிம்மத்தில் பிரவேசம் செய்வதன் மூலம் உங்களுக்கு அத்தை கையாள்வதற்கான சரியான வழிமுறைகளை காட்டுவார் திடீர் தனயோகம் அடுத்தவர் மூலமாக உதவிகள் கிடைப்பது போன்ற நல்ல காரியங்கள் ஏற்படும்...

 ரிஷப ராசி :

 ரிஷப ராசிக்கு எப்பொழுதுமே புதன் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாக வருவார் அவர் நாலாம் வீட்டில் அமர்வதன் மூலம் நீண்ட நாட்களாக உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்தான தெளிவு உங்களுக்கு கிடைக்கும் வீடு மனை பொன் பொருள் சேர்க்கை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது வாகனங்கள் மூலம் லாபம் போன்றவை உங்களுக்கு உண்டாகும்...

 மிதுன ராசி:

 அந்த மிதுன ராசி வாசகர்களே ராசி அதிபதி புதனாகவே மூன்றாம் இடத்தில் அமர்வது தயங்கி தயங்கி நின்ற காரியங்களில் கூட சொல்லி அடிப்பது போன்ற வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் செய்த வேலைக்கு யாரும் இதுவரை பேர் வாங்கி இருந்தால் கூட தற்பொழுது உங்களுக்கான அங்கீகாரம் உங்களை வந்து சேரும் சமுதாயத்தில் அந்தஸ்து உயரும் மதிப்பு மரியாதை கூடும் ஓடாத வாகனமும் சரியாகிவிடும் பிரச்சனையான நிலம் வீடுகள் கூட சரியாகி உங்களுக்கான வருவாயை கொண்டு வந்து சேர்க்கும்...

 கடக ராசி...

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே ராசிக்கு 12 ஆம் அதிபதியும் மூன்றாம் அதிபதியும் இரண்டில் நின்றால் என்னவாகும் ? ஏற்கனவே குடும்பத்தோடு சரியாக பேச முடியாத சூழ்நிலையில் இருக்கும் சிலருக்கு இந்த அமைப்புகள் சாதகமாக இருக்கும் வம்பு வழக்குகள் கோர்ட் கேஸ் குடும்பத்தில் சிக்கல் போன்றவை நடந்து கொண்டிருப்பவர்களுக்கு தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும் உற்றார் உறவினர்களால் தொல்லை ஏற்பட்டு கொண்டு இருந்த கடக ராசி அன்பர்கள் உங்கள் பக்கம் நியாயத்தை புரிந்து உங்களை தேடி ஆட்கள் வருவார்கள் பொருளாதார நிலை உயரும் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு கையில் காசு தங்கும்...

 சிம்ம ராசி :

 அன்பார்ந்த சிம்ம ராசி அன்பர்களே ராசியிலேயே புதன் வந்து அமர்வது மிகப்பெரிய யோகம் உங்களுடைய சிம்ம ராசியில் இருந்து 11 மற்றும் இரண்டாம் அதிபதி ராசிக்கு வருவதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும் மூத்த சகோதர சகோதரிகள் மூலம் ஆதாயம் உண்டு குடும்பத்தில் நல்ல மதிப்பு மரியாதை கூடும். உறவினர்களால் வீடு களைகட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு போக்குவரத்தால் லாபம் உண்டு...