கரூரில் 2000 மேற்பட்டோர் கலந்து கொண்ட ரம்ஜான் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கிய சத்திய சாய் சேவா நிறுவனம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி கரூர் திருமாநிலையூர் திடலில் கரூர் ஐக்கிய ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், ஈத்கா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் 30,000 மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு முன்பாக மத உணர்வை மறந்து சத்திய சாயி சேவா நிறுவனம் சார்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்