சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi) விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஏரிக்குப்பதில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


சனிப்பெயர்ச்சி(Sani Peyarchi):


பொதுவாக ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தல் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.


இந்த நிலையில் இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறுகிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது திருவண்ணாமலை  மாவட்டம் ஏரிகுப்பதில்  உள்ள பிரசித்தி பெற்ற யந்திர சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடக்கும் போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 


 


 




யந்திர வடிவில் தயார் சாயா தேவியுடன் யந்திர சனீஸ்வரன் கோயில்


நவகாரங்களின் ஒருவரான சனி பகவனை சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி  அருகில் உள்ள ஏரி குப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பியுள்ளார். சனீஸ்வரர் ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து சிவலிங்கத்தின் பானை வடிவிலேயே சிலை அமைத்து கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்கு பின் கோயில் அழிந்து சாமி சிலை மட்டும் திறந்த வெளியே இருந்தது பின் பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர் எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்றப்பட்டது. அதே சமயம் இத்திருக்கோயிலில் பரிகார பூஜை, பரிகார ஓமம் , சனிகிரக தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொள்ள 250 கட்டணம் கட்டிவிட்டு இந்த பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம்