தினமும் வெறும் 7 நிமிடங்கள் தியானம் ...சத்குரு வெளியிட்ட புதிய ஆப்..15 மணி நேரத்தில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்
ஆன்மிக குருவான ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் வெளியிட்ட தியானம் பற்றிய புதிய செயலிலை 15 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளார்கள்

சத்குரு
உலகளவில் பிரபலமான ஆன்மிக குருவாக அறியப்படுகிறார் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ். இவர் கோவையில் நிறுவியுள்ள ஈஷா யோகா மையத்திற்கு தினந்தொறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை நட்சத்திரங்கள் , அரசியல்வாதிகள் என பலர் சத்குருவின் சீடர்களாக இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சத்குரு வெளியிட்ட புதிய செயலி
இதே நாளில் சத்குரு தியானத்தை பற்றி புதிய செயலி ஒன்றை வெளியிட்டார். Miracle Of Mind என்கிற இந்த செயலியை அனைவரும் இலவசமாக செல்ஃபோனில் தரவிரக்கிக் கொள்ளலாம். மேலும் தினமும் 7 நிமிடங்கள் இதில் தியான பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர்த்து ஏ.ஐ தொழிநுட்பம் மூலம் நம் கேட்கும் ஆலோசனைகளுக்கு சத்குருவின் பதில்களையும் கணடடையலாம். இந்த ஆப் வெளியிடப்பட்ட 15 மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் பேர் இதை டவுன்லோட் செய்துள்ளார்கள். ஆங்கிலம், இந்தி , தமிழ் , ஸ்பேனிஷ் , ரஷ்யன் உள்ளிட்ட மொழிகளில் இந்த ஆப் பயன்படுத்தலாம். ஏ.ஐ செயலியான ChatGPT வெளியாகி 4 நாட்களுக்குப் பின்னரே 10 லட்சம் டவுன்லோட்ஸ் எட்டிய நிலையில் சத்குருவின் ஒரு சின்ன ஆப் இவ்வளவு வேகமாக பயண்பாட்டிற்கு வந்துள்ளது மக்கள் ஏகப்பட்ட மன குழப்பங்களுடன் இருப்பதையே காட்டுகிறது. " 2050 ஆண்டிற்குள்ளாக உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் ' என சத்குரு சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது