புயல் காரணமாக  பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது புயலின் தாக்கம்  குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.  ஃபெஞ்சல் புயல் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து மத்திய வானிலை மையம்   அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சபரிமலை பகுதிகள் உட்பட  கேரளாவில்  அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில்தான் சபரிமலை மட்டுமல்லாமல் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?




குறிப்பாக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சபரிமலை வரும் பக்தர்கள் பெரியபாதை காட்டுபாதை வழியாக சபரிமலை வருவதற்கு  ஐயப்ப பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  சென்ற மாதம் நவம்பர் 30ம் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சபரிமலையில் கனமழை பெய்தது. வானம் எந்த நேரமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பனி சூழ்ந்தது. நேற்று காலை 8:00 மணி-க்கு பின் வானம் தெளிந்தது. வெயில் அடிக்க துவங்கியது.அவ்வப்போது வானில் மேகமூட்டம் காணப்பட்டாலும் மாலை வரை வெயில் அடித்ததால் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் நடத்தி திரும்பினர்.


PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?




தொடர் மழையால் குமுளி,- சத்திரம்,- புல் மேடு, எருமேலி,- முக்குழி, கரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி தற்காலிக தடை விதித்திருந்தார். நேற்று காலை முதல் மழை பெய்யாததால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை வரை அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில், 'நாளைய காலநிலையை பொருத்து முடிவெடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.


Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!


இன்றும் மழை இல்லாமல் வெயில் அடிக்கும் பட்சத்தில், பக்தர்கள் இப்பாதைகளில் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினமும், புல் மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். நடப்பு சீசனில் இதுபோன்று திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண படையினர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மழை குறித்த முன்னறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.