பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.


6+2 பார்முலா.. பாஜக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் மெகா பிளான்!



அப்படி தரிசனம் செய்வதற்காக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த வருடம் வரும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது தவிர ஒவ்வொரு தமிழ் மாத (மலையாள மாதத்தின்) பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும். மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி திருவிழாவையொட்டியும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


Lok sabha Election 2024: ம.நீ.ம.விற்கு ஒரு ராஜ்ய சபா சீட்! மக்களவையில் போட்டியில்லை! ஆனால் ஆதரவு உண்டு - கமல்ஹாசன்



அதன்படி, பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். 25-ந் தேதி 10-ம் நாள் திருவிழாவன்று பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். அதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.