ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது புயலின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளிய செல்ல முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 


ஃபெஞ்சல் புயல் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து மத்திய வானிலை மையம்  நேற்று முந்தினம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை பகுதிகள் உட்பட  கேரளாவில்  அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.




இந்த நிலையில் கேரளாவின் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால்,  சபரிமலை பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ, குளிப்பதற்கு தடை விதித்தும், சத்திரம் வழியாக மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனி உத்தரவில் கூறியிருப்பதாவது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


கனமழை எச்சரிக்கை நீக்கப்படும் வரை, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் மலைப்பாதைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரேம் கிருஷ்ணா உத்தரவில் தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் சபரிமலையில் கனமழை கால சூழல் மாறிய நிலையில் வானிலை முன்னறிவிப்பு மாறியதையடுத்து, சபரிமலை பக்தர்கள் பம்பை ஆற்றுக்குள் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் போலீஸார் ஆற்றின் இரு கரைகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.


பம்பை நீர் நிலைகளை நீர்ப்பாசனத் துறை 24 மணி நேரமும் கண்காணிக்கும். சன்னிதானத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் மழை அளவைக் கண்காணிக்க மழை அளவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் வனப்பகுதிகளில் பெய்த மழை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். மழை அதிகரித்தாலோ அல்லது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டாலோ, பம்பை ஆற்றில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள சிறப்பு செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?




தற்போதைய வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. டோலி கேரியர்களுக்கான ப்ரீபெய்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு டோலி கேரியர் சேவைகளுக்கு ப்ரீபெய்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பை, நீலிமலை, வழிய நடப்பந்தல் ஆகிய இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்படும். நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பணம் செலுத்தலாம். முன்மொழியப்பட்ட விகிதங்கள் பின்வருமாறு: 80 கிலோ வரை: ரூ.4,000 100 கிலோ வரை: ரூ 5,000 100 கிலோவுக்கு மேல்: ரூ.6,000 மேலும், தேவசம் போர்டு ஒரு சேவைக்கு ரூ.250 கூடுதலாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.