நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
மேஷம்
சுபகாரியங்களில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவு எடுக்கவும். நெருக்கமானவர்களின் மூலம் சேமிப்பு குறையும். கவனம் வேண்டிய நாள்.
ரிஷபம்
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான ஊதியம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபார அபிவிருத்தி சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
மிதுனம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் தடைகள் நீங்கும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைகள் விலகும் நாள்.
கடகம்
எதிர்பாராத சில செலவுகளால் குழப்பம் ஏற்படலாம். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்து கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமான சில தடைகளின் மூலம் எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
கன்னி
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
துலாம்
பணிபுரியும் இடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
விருச்சிகம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
தனுசு
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.
மகரம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையினால் அலைச்சல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
கும்பம்
உழைப்புக்கு ஏற்ப சாதகமான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
மீனம்
சமூக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை தீர ஆலோசித்து முடிவு எடுக்கவும். வெளியாட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். அமைதி வேண்டிய நாள்.