அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் நம்பிக்கையுடன் வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும். பிரதோஷ நன்னாளில் சிவபெருமானை நன்னாளில் ஏராளமான நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷம்:


பிரதோஷ நாளில் சிவாலயங்கள் களைகட்டி காணப்படும். பொதுவாக பிரதோஷ நன்னாள் சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாகும். பொதுவாக பிரதோஷம் மாதத்திற்கு 2 முறை மட்டுமே வரும்.


வழக்கமாக ஒரு மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வரும் திரியோதசி திதியில் மாலை நேரத்தில் வரும் 4.30 மணி முதல் 6 மணி வரை காலகட்டமே பிரதோஷம் ஆகும். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வமாக 3 பிரதோஷம் வருகிறது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.


வழிபடுவது எப்படி?


குரோதி ஆண்டான இந்த ஆண்டில் இன்றைய நாள் பிரதோஷம் ஆகும். மூன்று பிரதோஷங்கள் வரும் இந்த மாதத்தின் முதல் பிரதோஷத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அடுத்த 2 பிரதோஷங்களுக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது ஆகும். இனி வரும் 17ம் தேதி மற்றும் வரும் 31ம் தேதி மற்ற இரண்டு பிரதோஷ நாட்கள் ஆகும். இந்த இரண்டு பிரதோஷங்களும் சனி பிரதோஷம் ஆகும். இது கூடுதல் சிறப்பாகும். அடுத்தடுத்து 2 சனி பிரதோஷம் வருவது சிவ பக்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


வரும் 17ம் தேதி மற்றும் வரும் 31ம் தேதி வரும் இரண்டு சனி பிரதோஷங்களும் ஆவணி மாதத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த அபூர்வ பிரதோஷ நன்னாட்களில் சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் இருந்தால் வீட்டிலே சந்தனத்தில் லிங்கம் பிடித்து வழிபடலாம். சிவ நாமங்களை சொல்லி சிவ பெருமானை மனம் உருகி வணங்கலாம்.


பிரதோஷ தின வழிபாட்டின் மூலம் திருமண யோகம் கிட்டும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், கடன் பிரச்சினை தீரும் எனவும் நம்பப்படுகிறது.


மேலும் படிக்க: ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் தங்க இந்தாண்டு கூடுதல் குடில்கள் - நெல்லை ஆட்சியர்


மேலும் படிக்க: ஆடி கிருத்திகை... முருகனுக்கு அரோகரா... அந்தரத்தில் தொங்கியபடி முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்