சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை, நாகை அடுத்த நாகூர்  கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது.

சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட திரளான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.



 

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முன்தினம் பிறை தெரிந்ததை முன்னிட்டு நேற்று நாகூர் கடற்கரையில்  ரமலான் திடல் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட 2500 மேற்பட்ட இஸ்லாமியர்கள் உலக மக்கள் அமைதிக்காகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர். கடந்த 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள்  ரமலான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.