ரம்ஜான் இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பர்.


இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான்(Ramadan Month) வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில் அதிகாலை  சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது உணவு உண்டு நோன்பை தொடங்குவார்கள்.


பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோம்பை முடிப்பார்கள். நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்வது கட்டாயமாகும். ரமலான் மாதத்தை  இறைவனின் அருள் பெரும் மாதம் என்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.


 ரம்ஜான் நோன்பு விதிகள்:


1. இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும் அஸ்தமனத்திற்குப் பின்னரும் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.  


2. ரம்ஜான் நோன்பின்போது தண்ணீர் அருந்துதல் கூடாது.  


3. இந்த உலக இன்பங்களில் இருந்து நோன்புக் காலத்தில் விலகி இருத்தல் வேண்டும்.  


4. சூரிய உதயத்திற்கு முந்தைய உணவு ஷேரி என்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் உண்ணப்படும் உணவு இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது.  


5. இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் வரியவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் என்று குரான் வலியுறுத்துகிறது. நோன்பு இருப்பதுடன் ஜகாத் என்ற இந்த ஈகையையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.


6. நோன்பு காலத்தில் வன்முறை, கோபம், பொறாமை, பேராசை, காமம், புறம்பேசுதல் போன்ற தீய குணங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.


7. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ நோய் வாய்ப்பட்டவர்கள் நோன்பு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.  


8. ரம்ஜான் நோன்பு காலத்தில் பயணத்தில் இருந்தாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ நோன்பு வைக்க அவசியமில்லை.  


9. ஹதீத் சொல்வதாவது: மாதவிடாயில் இருக்கும் பெண்கள் நோன்பு மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது.  


10. ஒருவேளை ரம்ஜான் நோன்பு காலத்தில் சிலருக்கு சில தினங்கள் தவிர்க்க முடியாமல் நோன்பை வைக்க இயலாவிட்டால் நோன்பு காலத்திற்குப் பின்னரும் கூட விடுபட்ட நாட்களுக்காக நோன்பு வைக்கலாம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு ரம்ஜான் நோன்புக்கு முன்னதாக வேறெந்த நாளிலாவது அந்த விடுபட்ட நாட்களுக்கான நோன்பை மேற்கொண்டே ஆக வேண்டும்.


11. ஒரு தனிநபர் மறதியால் நோன்பை துறந்துவிட்டால் இன்னொரு நாள் முழுமையாக அந்த நோன்பை இருக்க வேண்டும். ஹனாஃபி ஸ்கூல் ஆஃப் இஸ்லாம் இதற்கு வேறு தீர்வை சொல்கிறது. மறதியால் நோன்பை முறிந்தால் அவர்கள் 60 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் மற்றும் நோன்பு காலத்தைவிட ஒரு நாள் கூடுதலாக நோன்பு இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.


12. உடல்நிலை சரியில்லாததால் நோன்பைக் கைவிட்டவர்கள் மற்றவர்களைப் போல் உணவு தானம் செய்ய வேண்டாம். அவர்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். 


நோன்பு இருக்கும் காலத்தில் நமது உடல் சுத்தமாகிறது. வருடம் முழுவதும் உடலிலும் மனதிலும் உள்ள தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் நம்மிடம் இருந்து விடுபட்டு இந்த ரமலான் மாதத்தில் நாம் புத்துணர்வு அடைகிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.