தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றாக கருதப்படுவது புரட்டாசி. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் மேற்கொள்ளும் விரதங்களால் ஏராளமான பயன்கள் நம்மை வந்து சேரும். புரட்டாசி மாதத்தில் என்னென்ன விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.


சித்தி விநாயக விரதம் :


சித்தி விநாயக விரதம் என்பது புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக மேற்கொள்ளும் விரதம் ஆகும். இந்த நாளில், விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.


சஷ்டி – லலிதா விரதம் :


பரமேஸ்வரி தாயை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் சஷ்டி – லலிதா விரதம். இந்த விரதத்தை புரட்டாசி மாத வளர்பிறையில் கடைப்பிடிக்கும் விரதம் இதுவாகும். இந்த நாளில் மேற்கொள்ளும் விரதத்தால் பரமேஸ்வரி தாயின் சர்வ மங்களங்களையும் பெறலாம்.


அனந்த விரதம் :


புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தில் அனந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.


அமுக்தாபரண விரதம் :


அமுக்தாபரண விரதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியில் கடைப்பிடிக்க வேண்டும். அமுக்தாபரண விரதத்தால் உமா மகேஸ்வரியின் அருள் கிட்டும். இந்த விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். அமுக்தாபரண விரத்தால் சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.


ஜேஷ்டா விரதம் :


ஜேஷ்டா விரதத்தை புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்க வேண்டும். ஜேஷ்டா விரதம் இருக்கும்போது அருகம்புல் கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டும். இதன்மூலம் குடும்பம் செழிக்கும்.


மகாலட்சுமி விரதம் :


புரட்டாசி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.


கபிலா சஷ்டி விரதம் :


கபிலா சஷ்டி விரதத்தை புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில் மேற்கொள்ள வேண்டும். சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இந்த விரதத்தால் ஏராளமான பலன்கள் கிட்டும்.


மேலும் படிக்க : Purattasi Viratham: புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள் தெரியுமா..?


மேலும் படிக்க : Navaratri 2022:நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை அம்மனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியங்கள்