கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா.


 




 


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாட்டப்பட்டது.


 



 


சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.


 




 


ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மேல தாளங்கள் முழங்க வைகாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு திருவீதி விழா காட்சி அளித்தார்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா என்ற கோஷத்துடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண