மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற குமர கோயில். இவ்வாலயத்தில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா சொற்பொழிவுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பால் பன்னீர் சந்தனம் தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து முருகன் திருவிளையாடல், வீரபாகுதூது, சிங்களகன் போர், உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை விளக்கும் சொற்பொழிவுகள் நாள் தோறும் நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் 30 -ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வும் மறுநாள் அக்டோபர் 31 -ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 115 வது குருபூஜைவிழா, மற்றும் மருது சகோதரர்களின் 221வது நினைவு விழாவையொட்டி, மலரஞ்சலி நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 115 -வது குருபூஜைவிழா மற்றும் சின்னமருது பெரியமருது இவர்களின் 221 -வது நினைவு விழாவை முன்னிட்டு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மாமன்றம் சார்பாக திருவுருவ படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவுக்கு, மூவேந்தர் முன்னேற்ற பாசறை மாநில இளைஞரணி செயலாளர், ஆத்தூர் ராஜா தலையிலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்னை-சொக்கலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முத்துராமலிங்க தேவர் படத்திற்கும், மருது சகோதரர்கள். படத்திற்கும், மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சில் ஏழை எளியவர்களுக்கு, உடைகளும் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று பத்தாவது நாளாக பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஐப்பசி மாதம் துவங்கியதை அடுத்து துலாக்கட்ட காவிரியில் புனித நீராடும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள முக்கிய சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று இரண்டு கரைகளிலும் எழுந்தருளி வழிபாடுகள் நடைபெறு வருகிறது. இந்நிலையில் 10 நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர்.