பொங்கல் பண்டிகை தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். தெலுங்கு பேசும் மாநிலங்களில் இப்பண்டிகை மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய வீட்டில் சுண்ணாம்பு, பெயிண்ட் அடித்து புதுப்பிப்போம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் கோலங்கள் போட்டு அலங்கரிப்போம். பரணில் இருக்கும் பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருட்களை சுத்தப்படுத்துவோம். பொங்கலிட சரியான நேரத்தைப் பார்ப்போம். பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்குவோம். 

Continues below advertisement

இத்தகைய பொங்கல் பண்டிகை நாளில் நாம் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்நாளில் நாம் செய்யும் செயல்கள் யாவும் பல விஷயங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக இந்த பொங்கல் பண்டிகை நாளில் நாம் தானம் செய்யக்கூடாத பொருட்கள் பற்றிக் காணலாம். 

இதெல்லாம் தானம் செய்யாதீங்க

பொங்கல் பண்டிகை நாளில் எக்காரணம் கொண்டும் எண்ணெய் தானம் செய்யக்கூடாது. இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் எண்ணெய் தானம் செய்தால், சனி பகவானின் அசுப விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும். உறவுகளில் கசப்பு ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்னைகளையும் உண்டாக்கலாம். 

Continues below advertisement

இந்த நாளில் எந்தவிதமான இரும்புப் பொருட்களையும் தானம் செய்யக்கூடாது. சாஸ்திரப்படி, இது கணவன் - மனைவி இடையே, குடும்ப உறுப்பினர்கள் இடையே  சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பொங்கல் நாளன்று பழைய உணவு, கிழிந்த துணிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை தானம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஜாதகத்தில் சனி பகவானை கோபப்படுத்தும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் அல்லது குடும்பம் நிதி ரீதியாக சிரமப்படும்.

இந்த வருடம் பொங்கல் பண்டிகை ஏகாதசியன்று வருகிறது. எனவே அந்த நாளில் அரிசி தானம் செய்யக்கூடாது. ஏகாதசியன்று அரிசி தானம் செய்வது நல்லதல்ல. இதன் காரணமாக, ஒருவர் செய்யும் பூஜைகள் பலனளிக்காது என்று கூறப்படுகிறது.மேலும் அன்று எள், வெல்லம், தானியங்கள், துணிகள், நெய், எண்ணெய் மற்றும் செம்புப் பாத்திரங்களை தானம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.  இது முன்னோர்களின் பாவங்களைப் போக்கி, முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.

பொங்கல் நாளில், சூரிய பகவானுக்கு பச்சரிசி உணவும், சனி பகவானுக்கு எண்ணெயும் படைக்கவும். இந்த பரிகாரம் பல பிறவிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். ஜாதகத்தில் சனி பலமாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளவை. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)