விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள முத்தாம்பாளையத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும் உரலில் மஞ்சள் இடித்தும், செடல் போட்டு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.  


விழுப்புரத்திலுள்ள முத்தோப்பு, முத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள  முருகன் கோவிலிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு கடந்த பத்து நாட்களுக்கு முன் கொடியேற்றம் செய்யப்பட்டு தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை  ஆகியவை நடைபெற்றன.


பங்குனி உத்திர விழாவினை இன்று முத்தோப்பு முத்தாம்பாளையம் பகுதிகளில் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் அலகு குத்தியும்,காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் மீது மிளாகய் அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். முத்தோப்பு முருகன் கோவிலில் முக்கிய நிகழ்வான இன்று குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் வயிற்று பகுதியில் உரல் வைத்து மஞ்சள் இடித்து நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.