அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு  நடைபெற்றது.


Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 - மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை




அதனை தொடர்ந்து தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம்நாள் திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான  தெப்பதேர் நிகழ்ச்சி நடைபெற்றது.


Budget 2024 Expectations: நாடே காத்திருக்கும் பட்ஜெட் 2024! என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு!




பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அன்று இரவு  நிறைவடைந்தது.


Budget 2024 Expectations: இடைக்கால பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? பொருளாதார நிபுணர் பேட்டி



 


பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் வருகை கூடுதலாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை தரம் பிரித்து எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 840 ரூபாயும் (ரூ.3,04,89,840), வெளிநாட்டு கரன்சி  631 நோட்டுகளும், தங்கமாக 221 கிராமும், வெள்ளியாக 9326 கிராமும் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.