பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!




அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில்‌ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான  நேற்று நடைபெற்றது.


Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!




திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி‌-வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து  அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Influenza : சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் அச்சுறுத்தல்: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வந்தால் இப்படியா? உஷார்




திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று  மாலை நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில், வராகநதி கரையில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.


Mettur dam: மேட்டூர் அணை இன்றைய நிலவரம்: நீர்வரத்து 1,561 கனஅடியாக சரிவு


இதையொட்டி தென்கரை கச்சேரி ரோட்டில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் அலங்கரிக்கப்பட்டது. பெரிய தேரில் அறம் வளர்த்த நாயகி சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி, சோமாஸ் கந்தர் உற்சவராக எழுந்தருளினார். வள்ளி-தெய்வானையுடன், பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் எழுந்தருளினார். மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கச்சேரி ரோடு, கீழரத வீதி, மேல ரதவீதி வழியாக சென்று 6.15 மணிக்கு 2 தேர்களும் நிலையை அடைந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண