அறுபடை வீடுகளில்  மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.


PM Modi Speech: குடும்பக்கட்சி திமுக; அம்மா ஜெயலலிதா; கட்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்: பொதுக்கூட்டத்தில் போட்டுத்தாக்கிய மோடி




இந்த நிலையில் பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவில் உண்டியல்கள் நிரம்பியதால் அதிலுள்ள காணிக்கை எண்ணி அளவிட முடிவு செய்யப்பட்டது.


Bus Accident: சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு இதுதான் காரணமா?


அதன்படி பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.


Latest Gold Silver Rate: எட்டாக்கனியாய் மாறும் தங்கம்.. சவரனுக்கு மீண்டும் ரூ.280 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..


முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து எண்ணி அளவிடப்பட்டது. இந்த உண்டியல் காணிக்கை மூலம் பணமாக 2 கோடியே 92 லட்சத்து 49,145 கிடைத்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகள் 503, தங்க நகைகள் 811 கிராம், வெள்ளி நகைகள் 15 கிலோ 400 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.