இன்று இரவு புத்தாண்டான 2026 ஜனவரி 1ம் தேதி பிறக்கிறது. பொங்கல், தை மாத பிறப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த மாதமாக ஜனவரி மாதம் அமைகிறது. 

Continues below advertisement

சிறப்பு வாய்ந்த நாட்கள்:

இந்த ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்கள் விசேஷம் மிகுந்த, சிறப்பு வாய்ந்த நாட்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜன. 1 - வியாழன் - ஆங்கில புத்தாண்டு

Continues below advertisement

ஜன. 3 - சனி - ஆருத்ரா தரிசனம்

ஜன. 4 - ஞாயிறு - ரமண மகரிஷி அவதாரம்

ஜன. 6 - செவ்வாய் - சங்கடஹர சதுர்த்தி

ஜன. 7 - புதன் - திருவையாறு ததிரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை

ஜன. 10 - சனி - தேவதோஷ்டமி

ஜன. 11 - ஞாயிறு - கூடார வல்லி

ஜன. 12 - திங்கள் - ஸ்ரீலட்சுமி  நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம்

ஜன. 14. - புதன் - போகி பண்டிகை

ஜன. 15 - வியாழன் - தை மாத பிறப்பு, பொங்கல்  பண்டிகை

ஜன. 16 - வெள்ளி - மாட்டுப் பொங்கல் 

ஜன. 17 - சனி - காணும் பொங்கல்

ஜன. 18 - ஞாயிறு - தை அமாவாசை

ஜன. 19 - திங்கள் - சியாமளா நவராத்திரி

ஜன. 20 - செவ்வாய் - திருமழிசை

ஜன. 23 - வெள்ளி - வசந்த பஞ்சமி

ஜன. 24 - சனி - சஷ்டி விரதம்

ஜன. 25 - ஞாயிறு - ரத சப்தமி

ஜன. 26 - திங்கள் - பீஷ்மாஷ்டசமி ( குடியரசு தினம்)

ஜன. 27 - செவ்வாய் - கிருத்திகை

ஜன. 30 - வெள்ளி - பிரதோஷம்

ஜன. 31 - சனி - வளர்பிறை சதுர்த்ததி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி

பொங்கல் கொண்டாட்டம்:

ஜனவரி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களாக முதல் நாளான ஜனவரி 1ம் தேதி உள்ளது. அதன்பின்பு, தை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகைகளும் இதே மாதத்தில் உள்ளது. 

பொங்கல் கொண்டாட்டம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை இந்த ஜனவரி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. நாட்டின் குடியரசு தினமும் இதே ஜனவரி மாதம்தான் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.