இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள்,நவராத்திரியைக் கொண்டாடும் அதே வேளையில், வங்காளத்திலும் பிற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் துர்கா பூஜை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது  .


 நவராத்திரி: 


இந்தியாவில் மக்கள் தற்போது  நவராத்திரி மற்றும் துர்கா பூஜை  துவங்கி  அடுத்தடுத்து பண்டிகைகளை கொண்டாட  தயாராகிவிட்டனர். நவராத்திரியும், துர்கா பூஜையும் என்று  நாம் பிரித்து பேசுவதில் இருந்து, இவை இரண்டும்  தனித்தனியான  பண்டிகைகள், என்பதை  இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இரண்டு பண்டிகைகளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், மதச் சடங்குகள் மற்றும் கொண்டாடப்படும் முறைக்கு ஏற்ப இரண்டிற்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது.


இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் நவராத்திரியைக் கொண்டாடும் அதே வேளையில், வங்காளத்திலும் பிற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் துர்கா பூஜை மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இரண்டும் துர்கா தேவியை வழிபடுவதாக தெரிந்தாலும் கூட, கொண்டாட்ட முறை தனித்தன்மை வாய்ந்தது.


நவராத்திரி விழா மற்றும் துர்கா பூஜை - இரண்டும் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களை பார்ப்போம்:


இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கி ,அக்டோபர் 4-ம் தேதி நிறைவடையும். துர்கா பூஜை விழா அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி ,அக்டோபர் 5-ம் தேதி நிறைவடைகிறது


அப்படியானால், இரண்டு பண்டிகைகளையும் உண்மையில் வேறுபடுத்துவது எதுவென்று பார்ப்போம்:


இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ,துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை ,துர்கா பூஜையாக மக்களால் கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான ,மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.


தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும்,குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல், பக்தி சிரத்தையுடன்  இருக்கிறார்கள். இதுவே வங்காளிகளுக்கு, துர்கா பூஜை கொண்டாட்டமானது, அசைவ உணவுகளை உள்ளடக்கிய நல்ல விருந்தாக இருக்கிறது.


கிழக்கு இந்தியாவில் வங்காளிகளால் கொண்டாடப்படும் துர்கா பூஜையானது அவர்களின் மிகப்பெரிய திருவிழாவாகும். திருவிழாவில்,பெங்காலிகள், தங்கள் பாரம்பரிய உணவுகளை குடும்பத்துடன் ரசித்து உண்ணுகிறார்கள். நவராத்திரி திருவிழா மற்றும் துர்கா பூஜை பண்டிகைகளுக்கு இடையே, வேறுபாடுகள் நிறைய இருந்தாலும், பண்டிகை கொண்டாட்டங்கள், மக்களை ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கும்,பகைமைகளை மறந்து கொண்டாட்டத்தில் ஈடுபடவும் வழி வகுக்கிறது. நவராத்திரி மற்றும் துர்கா பூஜையின் போது மத அனுஷ்டானங்களை பின்பற்றி ,பக்தி சிறத்தையுடன், வழிபாடு செய்ய வேண்டும் என்பதையே காலம் காலமாக பாரம்பரியமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.