கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு
அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. கொலு வைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் நவராத்திரி விழா தொடங்கியதில் தொடர்ந்து 9 நாட்களிலும் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று தொடர்ந்து நவராத்திரி திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாநகரில் உள்ள ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு தினதோறும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி எட்டாம் நாளை முன்னிட்டு ராஜ தர்பார் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி எட்டாம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக ராஜ தர்பார் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி எட்டாம் நாள் சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.