நவராத்திரியின் ஆறாம் நாளில், காத்யாயினி, கௌமாரி, மற்றும் சண்டிகா தேவியையும், வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. பார்வதி
லக்ஷ்மி,  மற்றும் சரஸ்வதி   என்ற மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ததை நினைவு கூறும் வகையில், இந்த அம்பிகையரை வணங்கி ,ஒன்பது இரவுகள் நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


இந்த சண்டிகா தேவியானவள், போர் குணத்துடன் இருக்கக் கூடியவள். இந்த தேவியை நாம் வழிபடும் போது பல ஜென்மங்களாக தொடரும் சாபங்கள், பாவங்கள் போன்றவை நிவர்த்தி ஆகும் என கூறப்படுகிறது.


இந்த நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. அக்டோபர் 1 அதாவது சனிக்கிழமை அன்று நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபாடு செய்யப்படுகிறது.  இதில் ஆறாம் நாளான சஷ்டி திதி மிகவும் சக்தி வாய்ந்த தினம் என்று சொல்லப்படுகிறது.


நவராத்திரியின் 6 ஆம் நாள் என்பது ,நவராத்திரி வழிபாட்டில் மகாலட்சுமியை வணங்கக் கூடிய நிறைவான நாளாகும். இதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களும் கலைமகளான சரஸ்வதியை வழிபட்டு வரங்களை பெறலாம். இன்றைய ஆறாம் நாள் நவராத்திரி வழிபாட்டில் காத்யாயினி, கௌமாரி, மற்றும் சண்டிகா தேவிகளை  நாம் வழிபடும் போது , தொடர்ந்து வரக் கூடிய பய உணர்வு நீங்கி விடுவதாக நம்பப்படுகிறது. இந்த சண்டிகா தேவி மகாலட்சுமியின் ரூபமாக பார்க்கப்படுவதால் சகல அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அன்னையாக  போற்றப்படுகிறாள்.


அதேபோல சண்டிகா என்றாலே சற்று உக்கிரமான ரூபம் கொண்ட அன்னையாக பார்க்கப்படுகிறாள். ஹோமங்களில் கூட சண்டி ஹோமம் மிக  உயர்ந்த பலனை தரக் கூடியதாக இருக்கிறது.


வழிபட வேண்டிய சக்தி தேவி: கௌமாரி, காத்யாயினி, சண்டிகா தேவி


திதி: சஷ்டி


இன்றைய ஆறாம் நாளில் கடலை மாவை பயன்படுத்தி தேவியின் நாமத்தை கோலமாக போடலாம்.


மலர்: 
செம்பருத்தி மற்றும் இலை வகையில் சந்தன இலை கொண்டு அம்பிகையை அர்ச்சனை செய்யலாம். 


பிரசாதம்:
நெய்வேத்யமாக தேங்காய் சாதமும், தானிய வகையில் பச்சைப் பயிறு சுண்டல் வைத்து வழிபடலாம். காலை நேரத்தில் தேங்காய் சாதம் மற்றும் மாலை நேரத்தில் பச்சை பயிறு சுண்டல் படைத்து வழிபடலாம்


நிறம் :
இன்று அம்பாளுக்கு ஏற்ற நிறம் கிளிப் பச்சை ,சாம்பல் நிறம். இந்த நிறத்தில் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றியும், நாமும் அதே நிறத்தில் புடவை அணிந்தும் பூஜை மேற்கொள்ளலாம். 


பழம்:
பழ வகையில் நார்த்தம் அல்லது ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி வழிபடலாம். 


ராகம்: 
இன்றையக்கு நீலாம்பரி ராகத்தில் அமைந்த பாடல்களை பாட வேண்டும். 


காத்யாயனி மந்திரங்கள்:


ஓம் தேவி காத்யாயந்யை நமঃ


யா தேவீ ஸர்வபூதேஷு மா காத்யாயநி ரூபேண ஸம்ஸ்থிதா । நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமঃ


சந்திர ஹசோஜ்ஜா வலகர, ஷார்துலவர் வாகனம், காத்யாயனி ஷுபம் தாத்யா, தேவி தானவ் காதினி


காத்தியாயினி ,கௌமாரி மற்றும் சண்டிகா தேவிகளை வழிபட்டால் வாழ்க்கையில் கவலைகள் நீங்கி,வெற்றிகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.


 நவ துர்க்கைகள், சப்த கன்னிமாரில் ஒருவரான காத்யாயினி தேவி, திருமண வரம் அருள்பவர், அதேபோல்  தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார். சண்டிகா தேவி, மகாலட்சுமியின் சக்தி வாய்ந்த அம்சமாக பார்க்கப்படுகிறாள். சண்டிகா தேவியை வணங்கினால், பல தலைமுறைகளாக குடும்பத்தில் நிலவி வரும் சாபங்கள், உடல் நல பாதிப்புகள், வறுமை நிலை ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆறாம் நாள் நவராத்திரி வழிபாட்டில் குறைகள் அனைத்தும் நீங்க, ஒரு சிறுமியை அழைத்து, நலங்கு வைத்து, விரும்பிய உணவு, புதிய ஆடை போன்றவற்றை வழங்கி, சண்டிகா தேவியாக வழிபடலாம்.


பூஜை செய்யும் முறை:


வீட்டில் கொலு வைத்திருந்தால், அங்கு, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம் . லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலக்ஷ்மி நாமாவளி, அபிராமி அந்தாதி, ஆகிய ஸ்தோத்திரங்களை பாடலாம். வழிபாட்டின் இறுதியாக விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து ஆராதனை செய்யலாம்.


பூஜைக்கான நேரம்:


காலை 9 மணிக்குள் மாலை 6 மணிக்கு மேல், அதேபோல், கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம். நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திரிக்கு பூஜை செய்யும் முன்பு, தமது வேண்டுதல்களை முன்வைத்து, அகண்ட தீபம் ஏற்றலாம்.