லக்ஷ்மி, சரஸ்வதி ,பார்வதி என்ற மூன்று சக்தி தேவிகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்த நாளை நினைவுபடுத்தும் விதமாக, நவராத்திரி பிரம்மாண்டமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேவியை ஒன்பது நாட்களும் ஒன்பது  வடிவங்களில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது


நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் தேவி மாஹேஸ்வரி, கௌமாரீ, வாராஹி என்ற பெயர்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி  என்ற பெயர்களில் லட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதியாகவும் பூஜிக்கப் படுகிறாள். சீதேவி தாயார், மகாலட்சுமி , திருமகள், அலைமகள் என பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறாள். என பல்வேறு திருநாமங்களில் போற்றப்படுகிறாள். நவராத்திரியின் இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில், கஷ்மண்டா என்ற சக்தி தேவியை  வழிபாடு செய்வது என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாட்கள் வரை நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்த ஒன்பது நாட்களும் 9 பெண் தெய்வங்களுக்கு ,விதவிதமான அலங்காரங்கள், பூஜைகள், பிரசாதங்கள் செய்து வழிபாடு நடத்துவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரமாக அம்பாளை பாவித்து அலங்காரம், ஆராதனை செய்து வழிபடுவர். நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், இரண்டாம் மூன்று நாட்கள் லக்ஷ்மி தாயாருக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


 நவராத்திரியின் 4ஆம் நாள், செப்டம்பர் 29 ஆம் தேதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என நம்பப்படுகிறது


நவராத்திரி நாள் 4: செப்டம்பர் 29, வியாழக்கிழமை 


வழிபட வேண்டிய சக்தி தேவி: மகாலட்சுமி


நிறம்: மஞ்சள்


கோலம்: 
அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.


ராகம்: பைரவி ராகம்


நைவேத்தியம்: 
காலை நேரத்தில் கதம்ப சாதம் மற்றும் மாலை நேரத்தில் பட்டாணி சுண்டல்.
தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு படைக்கலாம்


மந்திரம்: 
மகாலட்சுமி அஷ்டோத்திரம்


பலன்கள்: சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்


பூஜை : 5 வயது சிறுமிக்கு
 ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.


திதி : சதுர்த்தி.


மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.


பலன் : கடன் தொல்லை தீரும்


நவராத்திரியின் நான்காம் நாளான வியாழக்கிழமை மகாலட்சுமி தாயாரை அன்றைய நாளுக்குரிய தெய்வமாக வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.


தனது பக்தர்களுக்கு வாழ்வின் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் முதன்மையானவராக இருப்பவர்  மகாலட்சுமி தாயார்.


வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் என்பது நமது வாழ்வில் இருக்கும் என முன்னோர்கள் கூறுவார்கள்.


ஆகவே இந்த நவராத்திரி நாட்களில் சகல வளங்களையும் பெற்று , ஐஸ்வர்யத்துடன் வாழ மகாலட்சுமி தாயாரை, மல்லி ,ஜாதி, முல்லை ,தாமரை போன்ற வாசனை மலர்களால் போற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.


கோவில்களிலோ அல்லது வீட்டின்
பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், அங்கு அமர்ந்து மகாலட்சுமி தாயாருக்கான ஜெபங்களை பாராயணம் செய்யலாம்.


மகாலட்சுமி தாயாருக்குறிய இன்றைய நாளில் மகா லட்சுமி அஷ்டோத்திரம் , அஷ்டலக்ஷ்மி துதி, அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், கனக தாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை பாடி வழிபடலாம்.



அதேபோல் 
கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.


அன்றைய தினம், படிக்கட்டுக் கோலம் இட்டு,  வெற்றிலை ,பாக்கு பழம், பிரசாதம் வைத்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்.


வியாழன் அன்று வீட்டில் வறுமை நீங்கி, ஐஸ்வர்யம் பெருக,  வயதில் மூத்த பெண்மணிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


அன்றைய தினம் விரதம் இருந்து அம்பாளை வழிபட்டால் நமது வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.