கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாளை முன்னிட்டு சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் அன்னப்பறவை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.


 


 




நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து ஒன்பது நாளான கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அம்பிகைக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு வீணையுடன் காட்சியளித்த சுவாமியை அன்னப்பறவை வாகனத்தில் சுவாமி திருவீதி விழா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சுவாமியின் திருவீதி உலா ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் சாமி ஆலயம் குடி பூந்தது.


 




 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற நவராத்திரி சிறப்பு அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் . நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர் சார்பாக சிறப்பாக செய்தனர்.