நவராத்திரி விழா தொடங்கிவிட்டது. மஹாளய நாளான நேற்றே கொலு படியை இறக்கி, பொமைகளை அடுக்கி எல்லாம் தயார்படுத்தி வைத்த நிலையில் நேற்று முதல் நாள் கொலுவும் நிறைவுபெற்றுவிட்டது.


மகிசாசூரன் எனும் அரக்கன் அப்பாவி மக்களை தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாக்கி வந்ததால், மலை மகள், அலை மகள் மற்றும் கலை மகள் ஒரு உருவமாக இணைந்து, மகிசாசூரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதுதான் நவராத்திரி விழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.


இந்த நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வாக இருப்பது கொலு(Navarathri Golu) வைப்பதாகும், அதேபோல், இந்த விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவது நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களையும் திறமையையும் ஒருங்கிணைத்து, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காகவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 


கொலுவின் பாரம்பரியம்:


நவராத்திரி விழா என்றாலே, கொலு (Navratri Golu) வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கொலு வைத்து வழிபாடு நடத்துவதாக இருந்தால் அதனை காலங்காலமாக கொலு வழிபாட்டில் பின்பற்றி வந்த முறைப்படி, அடுக்கி வைத்து வழிபடுவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அழகாக கொலு அடிக்கினால் மட்டும் போதுமா? அதற்கேற்ப பூஜைகள் செய்ய வேண்டாமா? இதோ எப்படி வழிபடுவது? பிரசாதமாகக் கொடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற தகவல்கள் இதோ உங்களுக்காக.


இரண்டாம் நாளில் இவை எல்லாம் செய்யுங்கள்:


நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் தேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வழங்குவதே மரபு. அந்தவகையில் இரண்டாம் நாளான நாளை செப்டம்பர் 27 என்னென்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல். இரண்டாம் நாளில் வழிபட வேண்டிய சக்தி தேவியானவள் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கௌமாரி அம்மன் மற்றும் பிரம்மச்சாரிணி. நாளை துவதியை திதி. செவ்வாய்க்கிழமையான நாளைய ஆதிக்க நிறம் சிவப்பு. இறைவிக்கு உகந்த மலர் முல்லைப் பூ. நாளை தேவியின் முன் கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம் இட வேண்டும். அம்பாளுக்கு பாடும் பாடல் கல்யாணி ராக பாடலாக இருந்தால் சிறப்பு. நைவேத்தியமாக காலை நேரத்தில் புளி சாதம் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை பயத்தம் பருப்பு சுண்டல் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.


நவராத்திரியின் இரண்டாம் நாளில், துர்க்கையின் பல வடிவங்களை வழிபடலாம். பார்வதி தேவியின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்கள் தான் கொற்றவை தேவி. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி. முல்லைப்பூவும் மறு என்ற இலையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் விருப்பம் என்று நம்பப்படுகிறது. அதேபோல் வீட்டிற்கு கொலு பார்க்க வருவோருக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான பொருட்களை தானம் செய்வது, சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும்.


செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் பிரமச்சாரிணி தேவி, இவரை பூஜிப்பவருக்கு செவ்வாய் கிரக தோஷம் மற்றும் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.


பூஜை செய்யும் முறை:


பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.  நாளை ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், கோதுமை மாவில் கட்டம் கோலம் போட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.


ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் லிங்க்: