மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற மயூரநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விலா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 




இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகின்ற 18 -ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை  சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்  17 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நேற்று இரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து  பிப்ரவரி 18 -ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். 




இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில்  பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட  ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது.


Vijaya Ekadashi 2023: விஜய ஏகாதசி தேதி, நேரம் என்ன? விரதம் கடைபிடிக்கவேண்டிய முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்!




மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது.


10th Maths Model Question Bank: 10-ஆம் வகுப்பு கணக்கில் சதம் சாத்தியம்தான்; எப்படி? இதோ மாதிரி வினாத்தாள்!