மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் 3-ஆம் தேதி  கும்பாபிஷேகம் விழா நடைபெறும் என திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.




இதனைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருவாவடுதுறை ஆதீனம் முடிவெடுத்து திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோயிலில் நடைபெற்ற மகா பூர்ணாகுதியில் அவர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். 


Panguni Uthiram: பழனி முருகன் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாயூரநாதர் கோயிலில் குடமுழுக்கு பணிகள் வெகு விரைவில் நிறைவடைய உள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தார். மயூரநாதர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டது மயிலாடுதுறை மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட முழுவதும் உள்ள மயூரநாதரின் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் - வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண